பைபிள் கதைகள் : தாவீது-சாலமோன்

2சாமுவேல் – அதிகாரம் – 11

அதிகாரம் பதினொன்று சாமுவேல்

2. ஒரு நாள் சாயங்காலத்தில் தாவீது ( டேவிட் ) தன் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை உப்பரிகையின் மேல் உலாத்திக் கொண்டிருக்கும் போது ஸ்நானம் பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின் மேலிருந்து கண்டான். அந்த ஸ்திரீ வெகு செளந்தரவதியாயிருந்தாள்.

3. அப்போது தாவீது அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான். அவள் எலியாமின் குமாரத்தியும், எத்தியனான உரியாவின் ம்னைவியுமாகிய பத்சேபாள் – என்றார்கள்.

4. அப்போது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்து வரச் சொன்னான், அவள் அவனிடத்தில் வந்தபோது அவளோட சயனித்தான். பிற்பாடு அவள் தன் தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக் கொண்டு தன் வீட்டுக்குப் போனாள்.

5. அந்த ஸ்திரீ கர்ப்பம் தரித்து தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினான்…
6. அப்பொழுது தாவீது, ஏத்தியனாகிய உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினண்டைக்கு ஆள் அனுப்பினான்; அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதினிடத்திற்கு அனுப்பினான்.
7. உரியா அவனிடத்தில் வந்தபோது, தாவீது அவனைப் பார்த்து, யோவாப் சுகமாயிருக்கிறானா, ஜனங்கள் சுகமாயிருக்கிறார்களா, யுத்தத்தின் செய்தி நற்செய்தியா என்று விசாரித்தான்.

8. பின்பு தாவீது உரியாவை நோக்கி, நீ உன் வீட்டிற்குப் போய், பாதசுத்தி செய் என்றான்; உரியா ராஜ அரமனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவினிடத்திலிருந்து உச்சிதமான பதார்த்தங்கள் அவன் பின்னாலே அனுப்பப்பட்டது.
9. ஆனாலும் உரியா தன் வீட்டிற்குப்போகாமல், ராஜ அரமனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லாச் சேவகரோடுங்கூட படுத்துக்கொண்டிருந்தான்.
10. உரியா தன் வீட்டிற்குப் போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி, நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா?, நீ உன் வீட்டிற்குப் போகாதிருக்கிறது என்ன என்று கேட்டான்.
11. உரியா தாவீதை நோக்கி, பெட்டியும் இஸ்ரவேலும் யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கியிருக்கையில், நான் புசிக்கிறதற்கும், குடிக்கிறதற்கும், என் மனைவியோடே சயனிக்கிறதற்கும், என் வீட்டுக்குள் பிரவேசிப்பேனோ? நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும் உம்முடைய ஆத்துமாவின்பேரிலும் ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்றான்.
12. அப்பொழுது தாவீது உரியாவை நோக்கி, இன்றைக்கும் நீ இங்கேயிரு; நாளைக்கு உன்னை அனுப்பிவிடுவேன் என்றான்; அப்படியே உரியா அன்றும் மறுநாளும் எருசலேமில் இருந்தான்.
13. தாவீது அவனைத் தனக்கு முன்பாகப் புசித்துக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனை வெறிக்கப்பண்ணினான்; ஆனாலும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல், சாயங்காலத்திலே தன் ஆண்டவனின் சேவகரோடே தன் படுக்கையிலே படுத்துக்கொண்டான்.

” அதன் பின்னால் உரியாவை ( பத்சேபாளின் கணவனை) பின்னர் கொலை செய்ய திட்டமிட்டு முடிக்கிறார்.
14. காலமே தாவீது யோவாபுக்கு ஒரு நிருபத்தை எழுதி, உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான்.
15. அந்த நிருபத்திலே, மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு, அவனை விட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான்.
16. அப்படியே யோவாப் அந்தப் பட்டணத்தைச் சூழக் காவல்போட்டிருக்கையில் பராக்கிரமசாலிகள் இருக்கிறார்களென்று தான் அறிந்த இடத்தில் உரியாவை நிறுத்தினான்.
17. பட்டணத்து மனுஷர் புறப்பட்டுவந்து யோவாபோடே யுத்தம்பண்ணுகையில், தாவீதின் சேவகராகிய ஜனத்தில் சிலர் பட்டார்கள்; ஏத்தியனாகிய உரியாவும் செத்தான்.
” இந்த உரியாவின் மனைவியும் தாவீதும் செய்தது பச்சை விபச்சாரம் –

இவர்களுக்குப் பிறந்தது தான் சாலமோன் ஞானி – இவர் வம்சத்தில் வந்தவர் ஏசு

This entry was posted in சாலமோன், தாவீது, பைபிள் கதைகள். Bookmark the permalink.

7 Responses to பைபிள் கதைகள் : தாவீது-சாலமோன்

  1. daniel t jayapal says:

    good i need more

  2. viji says:

    Hello friend, can u add the early life of David. Don’t mistake me. Because it is not completed like ruth & solomon story.

  3. alwin Simon says:

    There are millions of websites for different stuff but this is a very holy website as it holds our holy bible, and i am quite happy to read the same in my own mother tongue

  4. Prabhu says:

    Dear Bro: God Bless U,Because U told about truth Good. but U remember My Jesus was holy God, he came to save all of us. Jesus not ask any blood sacrifice but he him self sacrifice on the Cross and save who are believe him.

  5. dinesh says:

    dear brother dont play with god and his true word ok?

  6. jeshurun says:

    hello friend may my lord Christ will give you a knowledge truth to find ….But one thing i want to say Christians (we) are not followers of DAVID they (we) are followers of JESUS CHRIST…. and you cant point out a single mistake in my LORD Jesus Christ..

Leave a comment